பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 18, 2023 - 15:45
பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் செஹான் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதல் முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாகவும் பரீட்சைக்கு தோற்றுவார்களாயின் அவர்களுக்கு சிறிய இடைவேளை ஒன்று வழங்கப்பட வேண்டும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் உரிய முறையில் பரீட்சைகளை திட்டமிட்டு நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கத்தின் செயலாளர் செஹான் திசாநாயக்க கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!