வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக நீரவரத்து காரணமாக தெதுறு ஓயா, தப்போவ, வெஹெரகல, லுனுகம்வெஹர, மாவர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மஹாஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அளவ்வ, வென்னப்பு, மீகமுவ, கடான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்கள் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பல பகுதிகளில் நேற்று இரவு பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.