அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவது எப்போது? - வெளியான தகவல்!
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த மாதத்தில் இருந்து அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவு உரிய முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.