போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Jan 9, 2024 - 13:24
போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை, நிந்தவூர் பொலிஸார் கைது செய்தனர்.

அம்பாறை - நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று (08)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம் மற்றும் போதைப்பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கைது செய்யப்பட்ட 32, 33 மற்றும் 34 வயதுடைய 3  சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

(பாறுக் ஷிஹான்)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...