துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?
தங்காலை, நலகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.