மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Mar 6, 2023 - 13:35
Mar 6, 2023 - 13:37
மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பிரதமரின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜயசுமன கூறியது பொய்யான தகவல் என தெரிவித்திருந்தது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வழங்கியிருந்த, அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொடுப்பதில், பிரதமர் தினேஷ் குணவர்தன போதுமான தலையீடுகளை மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை அந்த கட்சி முன்வைத்துள்ளது.

பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதை தவிர மாற்று வழிகள் இல்லை எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்