150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிக்கு மேல் உருவான வளிமண்டலத் தளம்பல் இன்று காலை குறைந்த அழுத்தப் பகுதியானது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை காரணமாக, நாட்டின் மழை மற்றும் காற்றுத்தீவிரம் அடுத்த சில நாட்களில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், பொலன்னறுவை மாவட்டம், இந்த பகுதிகளில் சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழைவீழ்ச்சி ஏற்படலாம்.
நாட்டின் பிற பிரதேசங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்பட்டிடக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.