தென் கடலில் 300 கிலோ ஹெரோயின்: SJB முன்னாள் உறுப்பினர் கைது
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் இருந்த மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
இலங்கை கடற்படையினர் படகையும், அதில் பயணம் செய்த ஆறு மீனவர்களையும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு சோதனையின் போதே இந்த படகு தடுக்கப்பட்டது.
படகில் இருந்து 15 பொதிகளிலிருந்த 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.