மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இப்படியொரு காரணமா?
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்த செய்த இப்போது வைரலாகி வருகின்றது.

ஒரு சில செய்திகளை படிக்கையில் நமக்கே தூக்கி வாரிப்போட்டு விடும். அது போன்ற செய்தி ஒன்றுதான் தற்போது பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா.
இவர் நடித்த பல படங்கள் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, வழக்கமான பாலிவுட்டின் ஹீரோக்களில் இருந்து மாறுபட்டவராக இருக்கும் இவர், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
தாராள பிரபு, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேஷம், அந்தகன் உள்ளிட்ட படங்கள், இவர் நடிப்பில் வெளியான இந்தி படங்களின் ரீ-மேக்தான்.
இப்போது இவரை சுற்றித்தான் அந்த தாய்ப்பால் சர்ச்சை வலம் வருகிறது.
நடிகர் ஆயுஷ்மான் குரானா, 2008ஆம் ஆண்டு தாஹிரா காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்ட இவர்கள், பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
தாஹிரா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தவர். இவருக்கும் ஆயுஷ்மான் குரானாவிற்கும் ஒரு மகன்-ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா, ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் ஆவார். சில படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். The 7 Sins Of Being A Mother (தாயாக இருப்பதன் 7 பாவங்கள்) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அதில், தனது கணவர் குறித்து பேசியிருக்கும் அவர் ஆயுஷ்மான் குரானா, ஊட்டச்சத்துக்காக தனது தாய்ப்பாலை திருடி புரோட்டின் ஷேக்காக பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார்.
தான், பாங்காங்கிற்கு பயணம் செய்வதற்கு முன்பு, தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்து வைத்திருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து, அந்த பாட்டிலை காணவில்லை என்று தான் தேடியதாக தாஹிரா குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்து படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த தனது கணவரிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் குலுங்கி குலுங்கி சிரித்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், அந்த பால் சரியான வெப்பநிலையில் இருந்ததாகவும் அது தனக்கு சத்து கொடுக்கும் என்பதால் குடித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் எப்போது குழந்தைக்காக பாலை எடுத்து வைத்தாலும் மறைத்து வைத்துதான் கொடுப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் தாஹீரா.