கஞ்சா கலந்த மிட்டாய்களை சாப்பிட்ட 2 வயது சிறுமி கோமா நிலைக்குப் போனார்!
அப்போதுதான் குடும்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அவ்விழாவுக்கு வந்தவர்களில் ஒருவர் கஞ்சா கலந்த மிட்டாய்களை வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.

கஞ்சா கலந்த 10 மிட்டாய்களை மிட்டாய்களைச் சாப்பிட்ட 2 வயது சிறுமி சுயநினைவை இழந்து கோமா (coma) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், தாய்லந்தின் சியாங் மாயில் (Chiang Mai) இடம்பெற்றுள்ளதாக Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம், இந்த மாதத் தொடக்கத்தில் நடந்ததாகச் சிறுமியின் தந்தை கடந்த சனிக்கிழமை (5 ஜூலை) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலர் பாடசாலைக்குச் சென்ற சிறுமி, உணவு சாப்பிட மறுத்து மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததைக் கண்டு, ஆசிரியர் குடும்பத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பாடசாலைக்கு விரைந்த உறவினர், சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். எனினும், என்ன நடந்தது என்று குடும்பத்தினருக்குப் புரியவில்லை.
அப்போதுதான் குடும்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அவ்விழாவுக்கு வந்தவர்களில் ஒருவர் கஞ்சா கலந்த மிட்டாய்களை வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.
ஆனால், அதனை அவர் அங்கிருந்து எடுத்துச்செல்ல மறந்துவிட்டார். அந்த மிட்டாய்களைச் சிறுமி தவறுதலாகச் சாப்பிட்டிருக்கலாம் என்று குடும்பம் நம்பியது. இது தொடர்பில் அவர்கள் மருத்துவமனைக்குத் தகவல் வழங்கினர்.
24 மணி நேரம் சுயநினைவை இழந்து மீண்டு வந்த சிறுமி, வீட்டுக்கு அனுப்பட்டார். ஆனால், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எஞ்சியிருந்த மிட்டாய்கள் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் நடைபெறுகின்றன.