24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது
24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, 65 கிலோகிராம் ஹெரோயின், 136 கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.