நாடளாவிய ரீதியாக 8,742 தன்சல்கள்; ஏற்பாட்டாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
லித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தன்சல் வழங்கும்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.