சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் மரணம் – 54,000 பேர் பாதிப்பு
நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1, 041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் மூன்று செயலகப் பிரிவுகளில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.