இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்
கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் யானை - மனித மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, இன்று (27) தெரிவித்துள்ளார்.
அத்துடன். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.