இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக பலி

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. அத்துடன், இடி, மின்னலும் தாக்கியது. 

நவம்பர் 27, 2023 - 18:02
நவம்பர் 27, 2023 - 18:11
இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக பலி

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. அத்துடன், இடி, மின்னலும் தாக்கியது. 

இதில் 20 பேர் பலியாகி உள்ள நிலையில்,  இந்திய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

நிவாரண பணியை மேற்கொள்ளும்படி உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையும்படி பிரார்த்திப்பதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

தெற்கு குஜராத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
வடகிழக்கு அரபி கடலில் குறைந்த வளிமண்டல அழுத்தம், மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!