சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது
இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
10 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில்ஜனாதிபதி செயலகம் முதலாவது கட்டிடமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இம்முறை புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் சுமார் 16,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.