பதுளை - பசறை பஸ் விபத்தில் 13 பேர் காயம்
பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை - பசறை 10 மைல்கல் பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இன்று காலை 6.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலைமை மோசமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.