08 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான சம்பவங்கள் வீதிகளில் இருந்து சறுக்கிச் சென்ற வாகனங்களினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனத்தினால் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். (News21)