விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Oct 3, 2022 - 10:18
Oct 3, 2022 - 16:19
விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது கஹடகஸ்திகிலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தியில் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்