மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (10) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Jan 10, 2023 - 21:31
மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும்  பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (10) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றக்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் கபில அத்துக்கோரல ஆகியோரின் பங்கேற்றதுடன் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்