முதல் முறையாக புளி வாழைப்பழம் ஏற்றுமதி
நாட்டிலிருந்து முதலாவது புளி வாழைப்பழ தொகுதி நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. முதல் தொகுதி துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து முதலாவது புளி வாழைப்பழ தொகுதி நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. முதல் தொகுதி துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்படும் புளிப்பு வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வொக்ஸ்ஹால் வீதியிலுள்ள டெவலப்மென்ட் இன்டர்பிளான் சிலோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று (25) ராஜாங்கனையில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.