நபரொருவர் அடித்து கொலை - சந்தேக நபருக்கு வலைவீச்சு
தாக்குதலுக்கு உள்ளான நபர் அவரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடுகம பிரதேசத்தில் நேற்றிரவு சிலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் அவரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவரது மனைவி, குழந்தை மற்றும் தாய் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தாக்கப்பட்ட நபரை உடுகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த கொடூர தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.