உலகின் ஆயிரம் சிறந்த பல்கலைக்கழகங்களில் ‘பேராதனை’

இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனையே எனவும் உபவேந்தர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 24, 2023 - 17:30
உலகின் ஆயிரம் சிறந்த பல்கலைக்கழகங்களில் ‘பேராதனை’

அமெரிக்காவில் உள்ள யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழக தரவரிசையின்படி பேராதனை பல்கலைக்கழகம் உலகில் 901 வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனையே எனவும் உபவேந்தர் கூறியுள்ளார்.

பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!