அடுத்த ஆட்டத்த பாருங்க.. இந்திய அணியை எப்படி வீழ்த்துறோம்னு.. கேப்டன் ஹோப்!
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கிய போது, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெறும் என்றே கணித்தனர்.
ஏனென்றால் உலகக்கோப்பை தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியால், இந்தியா போன்ற பெரிய அணியை வீழ்த்த முடியாது என்று பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியுள்ளது.
இதில் ஆடுகளம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கே இடமில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததும் இந்திய அணி தான்.
தொடக்க வீரர்களால் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்க்க முடியும் போது, பின் வந்த வீரர்களால் மட்டும் ஏன் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் வெற்றிக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பேசுகையில், எங்கள் அணி வெற்றிபெறும் போது நான் அரைசதம், சதம் அடித்திருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த ஆடுகளம் கடினமாக இருக்கும் போது, அதிரடியாக ரன்கள் தொடங்க வேண்டும்.
திணறிய இந்திய வீரர்கள்.. திடீரென வாட்டர் பாயாக மைதானத்திற்குள் வந்த கிங் கோலி!
இந்தியாவின் சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம். நிச்சயம் இந்த வெற்றியால் மனம் நிம்மதியடைகிறது. இன்னும் ஒரேயொரு வெற்றியை பெற்றால், தொடரையும் எங்களால் கைப்பற்ற முடியும்.
இந்திய அணி கூடுதல் ஆக்ரோஷத்துடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்கள் உடல்மொழி பற்றி தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். அதனை களத்தில் சரியாக வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.
இன்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டதை போல் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த ஆடுகளம் கடினமானது என்பது உண்மை தான். ஆனால் எங்களின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறுவேன். நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.