அந்த தமிழக வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும்.. யுவராஜ் சிங் காட்டம்!

செப்டம்பர் முதல் வாரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணியின் வீரர்களின் தேர்வையும், வீரர்களையும் விமர்சிக்க வேண்டும். 

செப்டெம்பர் 30, 2023 - 21:41
அந்த தமிழக வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும்.. யுவராஜ் சிங் காட்டம்!

செப்டம்பர் முதல் வாரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணியின் வீரர்களின் தேர்வையும், வீரர்களையும் விமர்சிக்க வேண்டும். 

அவர்கள் நல்ல மனநிலையுடன் வாழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு அனுப்ப வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் யூட்யூப் வீடியோ மூலமாக வாழ்த்தினார்.

ஆனால் கடைசி நேரத்தில் அக்சர் படேல் காயமடைந்ததால், ரவிச்சந்திரன் அஸ்வின் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதன் மூலமாக, 3 வகையான ஸ்பின்னர்களும் அணிக்குள் வந்துள்ளனர். 

இடதுகை ஸ்பின்னர், ஆஃப் ஸ்பின்னர், மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்று இந்தியாவின் ஸ்பின் அட்டாக் வேற லெவனில் உள்ளது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் தேர்வை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசுகையில், அக்சர் படேல் காயம் காரணமாக விலகினால் அவரது இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தான் தேர்வு செய்யப்படுவார் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் வாஷிங்டன் சுந்தர் இடதுகை பேட்ஸ்மேன் என்பதோடு, நல்ல ஆஃப் ஸ்பின்னர்.

அதேபோல் வாஷிங்டன் சுந்தர் இல்லையென்றால், சாஹலை தான் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இருவருமே இல்லாமல் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்துள்ளார்கள். 

என்னை பொறுத்தவரை இந்திய அணியில் லெக் ஸ்பின்னர் இல்லை என்பது மட்டுமே குறை. அதேபோல் நம்பர் 4 வீரராக கேஎல் ராகுலை களமிறக்க வேண்டும். அவர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடுகளங்களில் ஆஃப் ஸ்பின்னரின் தேவையை உணர்ந்தும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான் வீரர் அஸ்வினின் தேர்வை விமர்சித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல் யுவராஜ் சிங்கின் விமர்சனத்தை தவறு என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நிரூபிப்பார் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!