கொட்டகலை விபத்தில் இளைஞன் படுகாயம்
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த கார் என்பன மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த, கொட்டகலை ஸ்டோன்கிளிப் தோட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் டிக் ஓயாஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.