சட்டவிரோத மின்கம்பி அறுந்து இளைஞர் உயிரிழப்பு
மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.