வட்டியில்லா கல்விக் கடனுக்கு இம்மாதம் 20 வரை விண்ணப்பிக்கலாம்
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டியில்லா கல்விக் கடனுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பணம் திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஐந்து பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்றும் 18 உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ https://moe.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.