37 உணவுகள் ஒவ்வாமையால் உலகளவில் பிரபலமான இளம்பெண்
இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த பட்டியலில் ஏராளமான உணவு வகைகளால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தென்கொரிய தலைநகர் ஜியோல் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஜோன்னே பேன் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு சில உணவுகளால் ஒவ்வாமை இருப்பதாக ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார்.
இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த பட்டியலில் ஏராளமான உணவு வகைகளால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில், திராட்சை பழம் முதல் சில பழங்களாலும் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விசாவில் இருந்து விலக்கு அளித்த சீனா... எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?
அதாவது, சில உணவுகளை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் அவர் தோல் அலர்ஜியால் பாதிக்கப்படுவதாகவும், உடலில் அரிப்பு மற்றும் அதிக வெப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார்.
அவர் 37 என்ற எண்ணை பயன்படுத்தினாலும் அதை விட அதிகமான எண்ணிக்கையில் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.