விசாவில் இருந்து விலக்கு அளித்த சீனா... எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?

சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

நவம்பர் 25, 2023 - 23:56
விசாவில் இருந்து விலக்கு அளித்த சீனா... எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?

சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில் வரும் டிசெம்பர் 1-ம் திகதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!