எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சரின் அறிவிப்பு
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்துள்ளார்.
எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 500 மில்லியன் டொலருக்கு அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.