உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நாடு முழுவதும் சுமார் 2,312 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலப்பகுதி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நாடு முழுவதும் சுமார் 2,312 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டதுடன், 333,183 பேர் பரீட்சை எழுதினார்கள்.
பரீட்சை எழுதியவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 79,793 பேர் தனியார் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.