’அஸ்வெசும’ என்றால் என்ன?
நாட்டில் 'அஸ்வெசும' குறித்து அதிகமாக கடந்த சில நாட்களாக பேசப்படுகின்றது. 'அஸ்வெசும' என்றால் என்ன? என்று பார்க்கலாம்.

நாட்டில் 'அஸ்வெசும' குறித்து அதிகமாக கடந்த சில நாட்களாக பேசப்படுகின்றது. 'அஸ்வெசும' என்றால் என்ன? என்று பார்க்கலாம்.
எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் 'அஸ்வெசும' திட்டத்தினூடாக நலன்புரி உதவித் தொகையை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார்.
மத்தியதரம், பாதிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கடும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 4 சமூக பிரிவுகளுக்கு குறித்த கொடுப்பனவானது வழங்கப்படும்.
அத்துடன் சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகளும் இதன் ஊடாக வழங்கப்படும்.
- 400,000 மத்தியதர பயனாளர்கள் மாதாந்தம், ரூ.2,500 பணத்தொகையை 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை பெறுவர்.
- 400,000 பாதிக்கப்பட்ட பயனாளர்கள் மாதாந்தம், ரூ. 5,000 பணத்தொகையை 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை பெறுவர்.
- 800,000 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளர்கள் ரூ. 8,500 ஐ மாதாந்தம் பெறுவர்.
- கடுமையான வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள் மாதாந்தம் ரூ. 15, 000 ஐ 2023 ஜூலை 1 இலிருந்து அடுத்த மூன்று வருடங்களுக்கு பெறுவார்கள்,
குறித்த கொடுப்பனவுகள் ஜூலையிலிருந்து பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்றடையும் முறையை நலன்புரி நன்மைகள் சபை அமல்படுத்தியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிக்க ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட இந்த 'அஸ்வெசும' திட்டமானது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவால் மேற்பார்வை செய்யப்படுகிறது.