கொழும்பு மற்றும் சுற்றிய பகுதிகளில் இன்று நீர் விநியோகத் தடை: 8 மணி நேரம் நீர்வெட்டு

பொதுமக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நீர் சிக்கல்களை தவிர்க்க சபை அறிவுறுத்தியுள்ளது. 

டிசம்பர் 20, 2025 - 07:29
கொழும்பு மற்றும் சுற்றிய பகுதிகளில் இன்று நீர் விநியோகத் தடை: 8 மணி நேரம் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, மொத்தம் 8 மணி நேரம் நீர்வெட்டு அமலில் இருக்கும்.

கொழும்பு நகரின் 1 முதல் 15 வரையிலான பகுதிகள் உட்பட பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர பகுதிகளில் நீர்விநியோகத்தை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நீர் சிக்கல்களை தவிர்க்க சபை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நீர்வெட்டு, நீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தொடர்பான பராமரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!