8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

நாளை (08)  காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மே 7, 2023 - 14:38

இதன்படி கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய,ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் சகல பக்க வீதிகளிலும் மே8 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையினால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!