மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலப்பு

களைக்கொல்லி தண்ணீர் குடித்து வாந்தி எடுத்த மாணவிகளை பார்த்து பயந்து தானும் அந்த தண்ணீரை குடித்ததாக கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15, 2023 - 16:15
ஆகஸ்ட் 15, 2023 - 16:16
மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலப்பு

குளியாப்பிட்டிய நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் ஒன்று இன்று(15) இடம் பெற்றுள்ளது.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விடுமுறை; அறிவிப்பு வெளியானது

அவர்களது தண்ணீர் போத்தல்களில் மாணவிகளில் ஒருவர், ஒருவித விஷத்தை கலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக நாரம்மல பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில் களைக்கொல்லியை நீரில் கலந்துள்ள மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய மாணவி, திங்கட்கிழமை காலை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வகுப்பறையில் தங்கி பல மாணவிகளின்  குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி மருந்தை கலக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாணவியும் அதே பாடசாலையில் பத்தாம் ஆண்டு கல்வி கற்றுவருவதுடன், தனது நெருங்கிய நண்பர்கள் குழுவிற்கு சொந்தமான குடிநீர் போத்தலில் களைக்கொல்லி மருந்தை கலக்கியமை தெரியவந்துள்ளது.

களைக்கொல்லி தண்ணீர் குடித்து வாந்தி எடுத்த மாணவிகளை பார்த்து பயந்து தானும் அந்த தண்ணீரை குடித்ததாக கூறியுள்ளார்.

தண்ணீரில் கலந்துள்ள களைக்கொல்லி அதிக வலிமை இல்லாததால் மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!