கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று (17), 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று (17), 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் வழங்கல் நிலையத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு நடைமுறைக்கு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.