கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் நீர்வெட்டு
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்த வேலைகள் காரணமாக, கொழும்பின் ஐந்து பிரதேசங்களில் நாளையும் (09) நாளை மறுதினமும் (10) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (09) மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10) காலை 09.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.