எட்டரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (16), 8 அரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (16), 8 அரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
சபுகஸ்கந்த மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையால் இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.