கண்டி மாவட்டத்தில் நாளை 09 மணித்தியால நீர்வெட்டு
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (20) மு.ப. 8 மணி முதல் பி.ப. 5 மணி வரையினால 9 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெழும்புகஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிகலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவெல மற்றும் ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். (news21.lk)