டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வனிந்து ஹசரங்க ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஹசரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வடிவங்களான T20, ஒருநாள் போன்ற போட்டிகளில் நீடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.