ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக விசா நீட்டிப்பு
இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்கச் செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் காரணமாக இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
“இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கடி இன்னும் தணியாத நிலையில், இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்கச் செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ” என்று ஏப்ரல் 25 திகதியிட்ட அமைச்சரவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது