இந்தியாவிலேயே இல்ல.. விராட் கோலியின் ஹெட்போன் எந்த மாடல் தெரியுமா?
பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களத்திலும், களத்திற்கு வெளியேவும் என்ன செய்தாலும் ரசிகர்களிடையே அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
விராட் கோலி அணிந்திருக்கும் டீ ஷர்ட் முதல் குடிக்கும் தண்ணீர் வரை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது விராட் கோலியின் ஹெட்போன்ஸ் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்களை அந்நாட்டு மக்கள் கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம்.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரரின் ஜோஷ்வா சில்வாவின் தாய் விராட் கோலி நேரில் கண்டு அன்பை பொழிந்தார். இதையடுத்து அவர் ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் இந்திய ரசிகர்களையே நெகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், விராட் கோலி பயன்படுத்தி வரும் ஏர்பாட் என்ன வகை என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
விராட் கோலி பயன்படுத்தி வரும் பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ TWS வகை ஏர்பாட் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஹெட்போன்கள் இந்தியாவில் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை.
ஆன்லைன் மூலமாகவும் யாராலும் வாங்க முடியாது. பீட்ஸ் நிறுவனம் சார்பாக இந்தியாவில் இதுவரை எந்த பொருட்களும் விற்பனைக்கு வரவில்லை.
இதன் விலை ரூ.20 ஆயிரமாக உள்ளது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன கிளையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதால், விராட் கோலி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது வாங்கி இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.