கடைசி வரை விளையாட முடியலயே.. தலையில் அடித்து கொண்ட விராட் கோலி..!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
காரணம் இந்திய அணி 167 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடிய போது வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் கோலி 85 ரன்கள் உடன் இருந்தார். இதனால் உலக கோப்பையில் விராட் கோலி 8 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.
இதனால் விராட் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார். விராட் கோலி எப்போதுமே கடைசிவரை களத்தில் நின்று அணியின் இலக்கை வெற்றிகரமாக துரத்த வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
மேலும் 85 ரன்கள் வரை வந்துவிட்டு 15 ரன்களில் சதத்தை கோட்டை விட்டு சென்ற கோபமும் விராட் கோலிக்கு இருந்திருக்கிறது.
இதனால் பெவிலியன் சென்றவுடன் தாம் அவுட் ஆன வீடியோவை பார்த்த விராட் கோலி தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டு கோபமாக திட்டிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் இந்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விராட் கோலி நினைத்தார்
மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சதம் சாதனையை உலககோப்பை தொடரிலே முறியடித்து விட வேண்டும் என விராட் கோலி எதிர்பார்த்தார்.
இதனால் சதத்துடன் உலக கோப்பையை தொடங்கினால் அது அவருக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் 85 ரன்கள் வரை வந்து விட்டு இப்படி கடைசி வரை நிற்க முடியவில்லை என்ற கோபத்தில் விராட் கோலி தன்னைத்தானே திட்டிக்கொண்டார்.
இதை பார்த்தவுடன் போதும் அடித்து விட்டோம் என்று மனநிறைவு பெறாமல் ஒவ்வொரு ரன்னையும் கோலி மதிப்பதையே இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.