ஜெயிலரை முந்தியதா.. லியோ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் LCU-ன் உருவாகி உள்ளது. இப்படத்தை லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார்.

நவம்பர் 6, 2023 - 17:59
ஜெயிலரை முந்தியதா.. லியோ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

லியோ படம் வெளியாகி 18வது நாள் முடிவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், மிஷ்கின், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சாண்டி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ங

மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் LCU-ன் உருவாகி உள்ளது. இப்படத்தை லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லியோ படத்தின் வசூல் விஜய்யின் முந்தைய படங்களை விட மிக சிறப்பாக உள்ளது.

படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 148 கோடியை வசூலித்தது. அதே போல, முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் 461 கோடி ரூபாயை வசூலித்த இந்தப் படம், 12 நாட்களில் சுமார் 540 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரித்த நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் திரைப்படங்களின் வசூலைக் கண்காணிக்கும் இணையதளமான sacnilk 18ஆம் நாள் முடிவில் ரூ 592 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், படத்தின் வசூல் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால், படம் விரைவில் ரூ 600 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!