இலங்கையில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா நடித்து வரும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக ‘VD12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக ‘VD12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இடம்பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, திரைப்படத்தின் தயாரிப்புக் குழு இலங்கைக்கு வந்துள்ளது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வந்துள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.