Viduthalai 2 First Day Collection: விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல்: விடுதலை 2' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகின்றது.

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது பாகம் உருவானது.
சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் விடுதலை 2 படத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை 2' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகின்றது.
இந்த நிலையில், விடுதலை 2 படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதுடன், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 7.65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.