மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை.. ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும் ஒரு கிலோகிராம் கறி மிளகாயின் விற்பனை விலை 500 முதல் 650 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, ஒரு கிலோகிராம் கரட் 460 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 500 ரூபாய்க்கும் இஞ்சி ஒரு கிலோகிராம் 3500 ரூபாய்க்கும் தேசிக்காய் ஒரு கிலோகிராம் 1800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.