அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்; அமெரிக்கத் தூதுவர்
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் தேர்தல்கள் நடப்பது ஜனநாயக ஆட்சிக்கு முக்கியம் என்று கூறியுள்ள அவர், அதனால் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமென நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குப்பெட்டியில் மக்களால் தங்கள் கருத்தைக் கூற முடியும் என்பதுடன் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பிறகும் தேர்தல்கள் முறையாக திட்டமிடப்பட்டிருக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண ஆவலுடன் காத்திருப்பதா கூறிய அவர், இலங்கையின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கலாசாரம் தொடரும் என்பதை அமெரிக்கா உறுதியாக நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.