ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று
குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாடு முழு நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.